Saturday, March 31, 2007

319. நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன் (அ) யாருக்காக இது யாருக்காக?

நம்ம முகம் தெரியாத 'கிராமத்து அரட்டை அரசியல் அனானி' நண்பர், கொஞ்ச நாள் பிஸியா இருந்துருப்பார் போல, இன்னிக்கு திடீர்னு மெயிலில் ஒரு மேட்டரை அனுப்பி அதை என் பதிவில் இடுமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். மேட்டர், 27% இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையை முன்னிறுத்தி நம்ம "திராவிட" இயக்க அரசு அறிவித்திருக்கும் ஒரு நாள் முழு அடைப்பு பற்றி தான்! எப்போதும் Hot Topics குறித்து தான் நம்ம கி.அ.அ.அ. எழுதுவாரு :) இது பத்தியும் அவரது பிரத்யேக 'அரசியல் அரட்டை' ஸ்டைலில் சூப்பரா, இந்த பந்த்-ஐ விளாசியிருக்காரு ;-) புரியரவங்களுக்கு புரிஞ்சா சரி தான்!

ஏற்கனவே, நம்ம 'இட்லிவடை' எல்லாரையும் முந்திக் கொண்டு, இந்த பந்த் பற்றி எழுதிட்டாரு. கி.அ.அ.அ. கொஞ்சம் லேட் தான், இருந்தாலும் லேட்டஸ்ட் :) Better Late than Never !

கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :) தலைப்பு மட்டும் என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே ! என்சாய் !
*******************************
இட ஒதுக்கீடும் நாளைய வேலை நிறுத்தமும்
------------------------------------------------------------

"அண்ணே நாளைக்கு வேலைக்கு போக முடியாதாண்ணே" என்றபடி வந்தான் மலையாண்டி

"எலே நம்மளை மாதிரியானவங்களுடைய சமூக நீதி காக்கத்தானடா நாளைக்கு பந்த்...மூதி வேலைக்கு போனா நானே உன்னை கல்லால அடிப்பேன்" என்றார் பேப்பர் படித்துக் கொண்டிருந்த மூக்கையண்ணன்

"இல்லண்ணே...நான் போக மாட்டேன்...வீட்டுல உக்காந்து சன் டீவி பாக்க வேண்டியதுதான்...ஆமா நாளைக்கு சன் டிவி இருக்குமுல்ல"

"டேய் ..அது இல்லாமையா? அதெல்லாம் "அத்தியாவசிய சேவை " நாட்டுக்கும் அவங்க வீட்டுக்கும்...அதுனால அதுக்கெல்லாம் விலக்கு தான்.. நாலு சமூக நீதி படம் போட்டு ..விளம்பரம் மூலம் கலெக்சன் பாத்துர மாட்டாங்க" என்றான் சுப்பிரமணி.

அப்போது அந்த வழியாக வந்த பூக்காரியிடம் மலையாண்டி "பொன்னாத்தா நாளைக்கு பூ வியாபாரத்துக்கு வந்துராத...நாளைக்கு ஸ்டிரைக்கு" என்றான்

"ஏனுங்க நானோ அன்னாடங்காய்ச்சி...என்னை இப்படி சொன்னா எப்படிங்க?" என்றாள் பொன்னாத்தா

"பூவெல்லாம் அத்தியாவசிய தேவையில வராது...அதுனால விக்க முடியாது..ஆமா பாத்துக்க..அது சரி நமக்காகத் தானே போராடுராங்க.. நம்ம சமூக நீதி காக்க நடக்குற பந்துல நாமளே கலந்துக்கலையின்னா எப்படி பொன்னாத்தா" என்றார் விளக்கும் வகையில் மூக்கையண்ணன்

"அப்படிங்களா...இன்னைக்கும் என் பையன் ஸ்கூலுல ரண்டு குடம் வச்சு எங்காளுங்களுக்கு ஒரு பானையிலும் மத்தவங்களுக்கு ஒரு பானையிலும் குடிக்க தண்ணி வக்கிறாங்க! அதைக் கேக்க ஒரு நாதியுமில்லை....இத்தனை வருஷம் ஆட்சில இருந்துக்கிட்டு அதுக்கோசரம் ஒண்ணும் புடுங்கிப் போட முடியலை..இன்னைக்கும் டீக்கடையில செயினுல தொங்குற அலுமினிய கிளாசு இவங்க சமூக நீதியை பார்த்து பல்லிளிக்குது ...வந்துட்டாங்க சமூக நீதியத் தூக்கிகிட்டு" என்று புலம்பியபடி போனாள் பொன்னுத்தாயி

"இந்தப் படிக்காத சனங்களுக்கு ஒரு மண்ணும் புரியறதில்லை" என அலுத்துக் கொண்டார் மூக்கய்யண்ணன்

"இல்லண்ணே...அது சொல்றதுலையும் ஞாயம் இருக்காப்புலதான் தெரியுது...இம்புட்டு ஏன்..நேத்தைக்கு சட்ட சபை பட்ஜட் கூட்டத்துலையே இடது கம்மூனிஸ்ட் கட்சிக்காரரு கோவிந்தராசுன்றவரு சில ஊர்களில் இன்னும் தீண்டாமை உள்ளது, அரசு பள்ளிகளில் ஆதிதிராவிடர்களுக்கு தனிப் பானையிலும் மற்ற மாணவர்களுக்கு தனிப் பானையிலும் குடிநீர் வைக்கப் படுகிறது..இதற்கான பட்டியலை ஆதாரத்துடன் தரத் தயார்! அரசு இதில் தலையிட வேண்டும்" அப்படீன்னு நேத்து பேசியிருக்காரு.....2007 ல் நடக்குற இந்த அக்கிரமத்துக்கு யாருமே வாயைத் தொறக்கலை ஆனா இதே ஆளுங்க 1931-ல எடுத்த சென்சஸ் கணக்கை ஆதாரமா வச்சு எப்படி ஒதுக்கீடு கேக்குறீங்க அப்படீன்னு கோர்ட் கேட்டதை எதுத்து சவுண்டு விடுறது சூப்பர் தமாசாத்தான் இருக்குது..."

அப்போதுதான் அங்கே வந்த சந்திரன் " டேய் அதுதாண்டா தலைவர் ஸ்டயிலு...அல்லாமே ஓட்டு கணக்கு பாத்துதான் செய்வாரு...இப்போ நாளைக்கு யாரை எதுத்து பந்த் பண்ணுறாங்க...மத்திய அரசைஎதுத்தா? அப்படீன்னா அரசுலே அவங்கதான இருக்காங்க... நீதித்துறையை எதுத்தா...நீதித்துறை ஒண்ணும் தனிச்சையா தீர்ப்பு குடுக்கலியே.. இரண்டு பக்கமும் உள்ள வாதங்களின் அடிப்படையில் "இடைக்கால தடை" தான அறிவிச்சிருக்காங்க..அதனை ஏத்துக்க முடியலைனா திரும்பவும் கோர்ட்டுக்குதான் போகணும்..அல்லது தீர்ப்பு குடுத்த நீதிபதிங்களை தூக்கியடிச்சுட்டு நாம நெனைக்கிற "பொறுப்புள்ள" நீதிபதிகளைப் போட்டு கேசை மறுபரிசீலனை பண்ணனும்.ஆனா இவரு அதெல்லாம் செய்யாம வெறும் பந்த் நடத்துவாரு..ஏன்? ஏன்னா எதிரியே இல்லாம வாள் சுத்துரதுல செம கில்லாடியாச்சே..இதுல எவனாவது கலந்துக்கிடலையின்னா அவன் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதி அப்படீன்னு பச்சை குத்தலாம்... அதுனால இதெதுக்குடா நமக்கு கெரகம்...அப்படீன்னு நெனைச்சுக்குட்டு வேற வழியில்லாம பந்துல கலந்துக்கிட்டானுங்கன்னா..பந்த் மாபெரும் வெற்றி..அப்படீன்னு அறிக்கை விட்டுக்கலாம்..போர போக்கைப் பாத்தா இவரே மாநில அரசின் கையாலாகாத்தனத்தினை கண்டித்து போராட்டம் நடத்துனாலும் ஆச்சரியமில்லை" என்றான்

உடனே மாயாண்டி, "தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டுக்கு கோர்ட் தடை எதும் விதிக்கலையே, அவிங்க ஏன் பந்த்ல கலந்துக்கணும்?" என்று கேட்க,

மூக்கையன் உடனே "இவன் "முன்னேறிய" எதிர்க்கட்சிக்காரன்.. இப்படித்தான் பேசுவான்" என்றார்

"ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுட்டாங்கைய்யா" என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் சந்திரன்
****************

என்றென்றும் அன்புடன்
பாலா

kuzali's posting
osai chella's posting

*** 319 **

11 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

பாலாஜி சார்

பதிவை பிரசுரித்ததற்கு நன்றி

ஆமா , நீங்க பந்த்தில் கலந்துக்கலியா ?பந்த் அன்னிக்கி பதிவெல்லாம் போடுறீங்க ? தலைவர் கோவிக்கப் போகிறார்... பாத்து :)))

இப்படிக்கு

இந்திய மக்களில் குறிப்பாக தமிழக மக்களில் கடையப்படாத (அதாவது க்ரீமை உள்ளடக்கிய) தாழ்த்தப் பட்ட ,பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் படப் போகும் மக்களின் நலன் மற்றும் சமூக நீதி பற்றியே (வெளி நாட்டிலிருந்து) :) எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும்

கி..அ.அ.அனானி

உண்மைத்தமிழன் said...

அருமையிலும் அருமை.. தலைவர் என்னை பெயர் சொல்லி அழைத்தார். அந்த ஒன்றே போதும்.. இன்னும் அம்பது வருஷத்துக்கு அவர் குடும்பத்துக்கு நம்ம குடும்பம் நாயா உழைக்கும் என்று சொல்லிப் புளகாங்கிதப்படும் முட்டாள்தனமான உடன்பிறப்புகள் இருக்கும்வரைக்கும் இந்த பந்த் போன்ற முட்டாள்தனங்களும் நீடிக்கத்தான் செய்யும். நன்றி பாலா அவர்களே.. உங்களை மாதிரி ஆளுகள்லாம் இப்படி இணையத்துலேயே எழுதிட்டிருந்தா எப்படி? கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்து ஊடகங்களில் எழுதினால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

சம்மந்தமில்லாமல் இன்றைய சந்திவி நிகழ்ச்சிகள் ஒரு மேலோட்டப்பார்வை:

இந்த நாள் இனிய நாள், குரு சிஷ்யன், அசத்தப்போவது யாரு? காசேதான் கடவுளடா, கொண்டாட்டம், வணக்கம் தமிழகம்!!!!!!

பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தால் நிறுத்தப்பட்டிருக்கின்றன, ரயில்களும் விமானங்களும் அவ்வாறே, ஆட்டோக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர், ப்ள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆக்டில்!! தமிழகத்தை 12 மணிநேரம் அடைத்து, தனக்குத் தானே புத்தி சொல்லிக்கொள்கிறார்களா? அரசாங்கம் பந்த் நடத்துவது பந்த் என்ற போராட்டமுறைக்கே எவ்வளவு இழுக்கு ஏற்படுத்துகிறது என்பதை யாரேனும் பார்க்கிறார்களா?

யாரேனும் இந்த பந்த் சட்டவிரோதமானது என வழக்கு தொடர்ந்திருக்கிறார்களா?

முக்கியமோ முக்கியமான டிஸ்கி: நான் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான எண்ணங்கள் கொண்டவன்.

said...

வாங்க உண்மைத்தமிழன்..கருத்துக்கு நன்றி....


அது சரி...

//கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்து ஊடகங்களில் எழுதினால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்///

இது யாருக்கு சொன்னது?பாலாஜி சாருக்கா..எனக்கா? இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டுத்தான் ஒடம்பு புண்ணாப் போய் கெடக்கு...இன்னுமா அடங்கலை :))))))

கி.அ.அ.அனானி

said...

வாங்க பினாத்தல்

உங்களோட வழக்கமான நய்யாண்டி நடையில முக்கியமா சொல்லவந்ததை போல்ட் எழுத்துக்கள்ள போட்டுட்டு அப்புறம் ஹைலைட்டா ஒரு டிஸ்கி வேற..நடத்துங்க :)))

enRenRum-anbudan.BALA said...

//
இந்த நாள் இனிய நாள், குரு சிஷ்யன், அசத்தப்போவது யாரு? காசேதான் கடவுளடா, கொண்டாட்டம், வணக்கம் தமிழகம்!!!!!!
//
This is called "penathal punch" ;-)

enRenRum-anbudan.BALA said...

பந்த் தமிழ் வார்தையா?கருனாநிதிக்கும் இராமதாசுக்கும... பந்த் தமிழ் வார்தையா?

கருனாநிதிக்கும் இராமதாசுக்கும் தமிழ் தெரியாதா.

ஏன் ... EDITED ... காப்பாதுறோம் சொல்றானுங்க.

EDITED ...............

தெ.ப.தி.க அரசியல் ஒழிக!

(பாரத் பந்த்) 1:21 AM

enRenRum-anbudan.BALA said...

பாரத் பந்த்,

Please refrain from Personal attacks,

Your comment had to be EDITED !

said...

:)))))))

said...

very nice ;))))))))))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails